Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் ஜவ்வரிசியும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா போதும்.. சாப்ட்டான சப்பாத்தி செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Javvarisi Chapati Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய கோதுமை மாவு, மைதா மாவு என்று எதுவும் இல்லையா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் ஜவ்வரிசி உள்ளதா? அப்படியானால் அந்த ஜவ்வரிசியைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சப்பாத்தி செய்யலாம்.
இந்த ஜவ்வரிசி சப்பாத்தி சுவையாக இருப்பது மட்டுமின்றி, சாப்ட்டாகவும் இருக்கும். மேலும் இந்த சப்பாத்தியை செய்தால் வழக்கமாக 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சப்பாத்திக்கு வெறும் தேங்காய் சட்னி இருந்தாலே போதும்.

உங்களுக்கு ஜவ்வரிசி சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மாவு ஜவ்வரிசி - 1 கப்
* உருளைக்கிழங்கு - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய்/நெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு கப் மாவு ஜவ்வரிசியை எடுத்து, ஒரு வாணலியில் போட்டு
அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து, 2 நிமிடம் வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த ஜவ்வரிசியை போட்டு, நன்கு மென்மையாக
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பொடித்த ஜவ்வரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு உருளைக்கிழங்குகளை எடுத்து, குக்கரில் போட்டு, கிழங்கு
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை
நீக்கிவிட்டு, அவற்றை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் துருவிய உருளைக்கிழங்கை ஜவ்வரிசி மாவுடன் சேர்த்து, சிறிது
உப்பு தூவி, முதலில் கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பிறகு சிறிது நீரைத் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு
மென்மையாக பிசைந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக
உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய்
அல்லது நெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக
போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான
மற்றும் மென்மையான ஜவ்வரிசி சப்பாத்தி தயார்.



Click it and Unblock the Notifications