Latest Updates
-
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
தோசை மாவு இல்லையா? ஸ்வீட் கார்ன் இருந்தா அத வெச்சு தோசை சுடுங்க.. எப்படின்னு பாருங்க..
Instant Sweet Corn Dosa Recipe In Tamil: காலை வேளையில் தோசை சுட மாவு தீர்ந்துவிட்டதா? என்ன சமையல் செய்வதென்று தெரியவில்லையா? வீட்டில் ஸ்வீட் கார்ன் உள்ளதா? அப்படியானால் அந்த ஸ்வீட் கார்ன் கொண்டு அட்டகாசமான சுவையில் தோசை சுடுங்கள்.
இந்த ஸ்வீட் கார்ன் தோசை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த தோசை 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். மேலும் இந்த தோசைக்கு வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. இந்த தோசைக்கு தக்காளி சட்னி, கார சட்னி போன்றவை அட்டகாசாமன சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு ஸ்வீட் கார்ன் தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் கார்ன் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஸ்வீட் கார்ன் - 2 கப்
* ரவை - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 2 டீஸ்பூன்
* பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் ஸ்வீட் கார்னை எடுத்து, அத்துடன் ரவை,
பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, 1/2 கப் தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
சில்லி ப்ளேக்ஸ், சோள மாவு, பச்சரிசி மாவு, சிறிது கொத்தமல்லியைத்
தூவி கிளறி விட வேண்டும்.
* மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், தோசை மாவு பதத்திற்கு தேவையான
அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மிதமான தீயில் வைத்து வேக வைத்து,
எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான
ஸ்வீட்கார்ன் தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications