Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
சத்தான.. இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை
உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக ஒரு இன்ஸ்டன்ட் தோசை மாவை வீட்டிலேயே 5 நிமிடத்தில் தயாரிக்கலாம். அதுவும் உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருந்தால், சத்தான ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடலாம்.
காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக ஒரு இன்ஸ்டன்ட் தோசை மாவை வீட்டிலேயே 5 நிமிடத்தில் தயாரிக்கலாம். அதுவும் உங்கள் வீட்டில் ஓட்ஸ் இருந்தால், சத்தான ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடலாம்.
ஓட்ஸ் தோசையானது மிகவும் சத்தானது. குறிப்பாக உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர் ஓட்ஸ் தோசையை செய்து சாப்பிடலாம். இது தவிர ஓட்ஸ் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உங்களுக்கு ஓட்ஸ் தோசையை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓட்ஸ் தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஓட்ஸ் - 1/2 கப்
* ரவை - 1/4 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* மோர் - 1/4 கப்
* தண்ணீர் - 2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஓட்ஸை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, ஓட்ஸ் பொடி ஆகியவற்றை போட்டு கையால் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மோர், நீர், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். கல் சூடானதும், கலந்து வைத்துள்ள ஓட்ஸ் மாவை தோசைகளாக சுட்டு எடுத்தால், ஓட்ஸ் தோசை தயார்.



Click it and Unblock the Notifications









