Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
இட்லி, தோசைக்கு 10 நிமிஷத்துல சைடு டிஷ் செய்யணுமா? அப்ப இந்த குருமாவை செய்யுங்க...
Instant Idli Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தான் செய்வீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா? இப்படி சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் சட்டென்று செய்யக்கூடியவாறு ஒரு இட்லி குருமாவை செய்யுங்கள். இந்த இட்லி குருமா இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, இடியாப்பம், அப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது வேலைக்கு செல்பவர்கள் டக்கென்று செய்யக்கூடியவாறு செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு இட்லி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 10
* தேங்காய் - 1/2 கப்
* பட்டை - 3 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 3
* பச்சை மிளகாய் - 3
* இஞ்சி - 4 துண்டு
* பூண்டு - 7 பல்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* வெங்காயம் வதங்குவதற்குள், மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம்,
தேங்காய், பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு, பச்சை மிளகாய், இஞ்சி,
பூண்டு, மிளகு, சீரகம், முந்திரி, பொட்டுக்கடலை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம் வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை
சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குக்கரை மூடி 6 விசில் விட்டு
இறக்கினால், சுவையான இட்லி குருமா தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications