Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
6 பிரட் இருந்தா போதும்... ஈவ்னிவ் ஜூஸியான சூப்பர் ஸ்வீட் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Instant Bread Sweet Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஸ்வீட் ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்வீட் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட் கொண்டு 10 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடியவாறு ஒரு ரெசிபி உள்ளது. அதை செய்யுங்கள்.
இந்த பிரட் ஸ்வீட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு ருசியாக இருக்கும். இந்த பிரட் ஸ்வீட்டை ஒருமுறை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த பிரட் ஸ்வீட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த பிரட் ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 6 துண்டுகள்
* சோள மாவு - 1/4 கப்
* தண்ணீர் - 3/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* சர்க்கரை - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒவ்வொரு பிரட் துண்டையும் எடுத்து, அதன் முனைப் பகுதியை
நீக்கிவிட்டு, வட்ட அல்லது சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் 1/4 கப் சோள மாவை எடுத்து, அத்துடன் 3/4 கப்
நீரை ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெயை சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிரட் துண்டுகளை எடுத்து, சோள மாவுடன் சேர்த்து
பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப்
சர்க்கரை மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி, சர்க்கரையை நன்கு கரைத்துக்
கொள்ள வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்து, சற்று பிசுபிசுவென்று ஒட்டும் பதத்திற்கு
வந்ததும், அதில் பொரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து
பிரட்டி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் பரிமாறினால், சூப்பர் பிரட்
ஸ்வீட் தயார்.



Click it and Unblock the Notifications