Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
தோசை மாவு இல்லையா? 10 நிமிஷத்துல இப்படியொரு அடை தோசையை செய்யுங்க.. டேஸ்ட்டா இருக்கும்...
Instant Adai Dosa Recipe In Tamil: காலையில் தோசை சுட உங்கள் வீட்டில் மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? இன்னும் எந்த ஐடியாவும் வரவில்லையா? அப்படியானால் அடை தோசையை செய்யுங்கள். இந்த அடை தோசை மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
இந்த இன்ஸ்டன்ட் அடை தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த அடை தோசை வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* கோதுமை மாவி - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி - சிறிய துண்டு
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப் + 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் ரவை, கோதுமை மாவு ஆகியவற்றை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்தை சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய கேரட், சீரகம், சற்று புளித்த தயிர், 1/2
கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி, அத்துடன் 1/4 கப் நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி
சேர்த்து கலந்து, 5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், சிறிது
எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே சிறிது
எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான அடை
தோசை தயார்.



Click it and Unblock the Notifications