Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இட்லிக்கு 10 நிமிடத்தில் இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Idli Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி தான் செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இட்லிக்கு சட்னியை விட குருமா சரியான பொருத்தமாக இருக்கும். ஏனெனில் குருமா செய்யும் போது, நன்கு குலைத்து சாப்பிடலாம்.
அப்படி குலைத்து சாப்பிடும் போது, கணக்கில்லாமல் இட்லி வயிற்றுக்குள் செல்லும். உங்கள் வீட்டில் உள்ளோர் அப்படி நன்கு இட்லி சாப்பிட வேண்டுமென்று நினைத்தால், ரோட்டுக்கடை இட்லி குருமாவை செய்யுங்கள். இந்த இட்லி குருமாவை 10 நிமிடத்தில் செய்துவிடலாம். மேலும் இது செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு இட்லி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இட்லி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 3
* அன்னாசிப்பூ - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 4
* சின்ன வெங்காயம் - 10-12
* பெரிய வெங்காயம் - 1
* தக்காளி - 3-4
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் விழுதிற்கு..
* முந்திரி - 5-6
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 1
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டி தேங்காய் பால் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு முந்திரி, கசகசாவை சுடுநீரில் 10 நிமிடம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பச்சை மிளகாய் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள்
மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து, மிதமான
தீயில் வைத்து, தக்காளியை நன்கு வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த கசகசா, முந்திரியை நீருடன் அப்படியே
ஊற்றி, அத்துடன் சோம்பு மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரியாணி இலை,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள தக்காளி வெங்காய விழுதை சேர்த்து நன்கு 2
நிமிடம் கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கிளறி இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான இட்லி குருமா தயார்.



Click it and Unblock the Notifications