Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்.. மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு வைச்சுக் கொடுங்க.. சளி புடிக்காது..!
மழைக்காலம் வந்தாலே நாம் அனைவரும் எதிர்க்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றுதான் சளி.. சளி பிடித்தால் காய்ச்சல் வரும். பின்னர் கூடவே இருமலும் வரும்.. இதனால் மூக்கடைப்பு, நெஞ்சு எரிச்சல், தலைவலி, காதுவலி, மூச்சி திணறல் இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் வரிசையாக வந்து நிற்கும்.
இவற்றையெல்லாம் சரிச் செய்ய வேண்டும் என்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம்.. ஆனால் அது 7 நாட்கள் வரை இருந்து விட்டுதான் போகும்.. அப்போதும் கூட சரியாகாது.. அதனால் மழைக்காலத்தில் எப்போதுமே இந்த மிளகு ரசத்தை வாரம் 2 முறை வைத்து வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுங்கள்.. இந்த ரசத்தில் மருத்துவ குணங்கள் ஏராளம். அதனால் உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. வாங்க இந்த மிளகு ரசத்தை வீட்டில் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. புளி
2. தனியா
3. மிளகு
4. துவரம் பருப்பு
5. சீரகம்
6. கடுகு
7. காய்ந்த மிளகாய்
8. உப்பு
செய்முறை
1. முதலில் புளியை ஒன்றரை ஆழாக்கு தண்ணீரில் நன்கு கரைத்து கல், மண் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
2. இப்போது மேற்கண்ட புளித் தண்ணீருடன் உப்பு தேவையான அளவு போட்டு சுமார் எட்டு நிமிடங்கள் வரையில் நன்கு கொதிக்கவிடவும்.
3. பிறகு தனியா, மிளகு, துவரம் பருப்பு, மிளகாய் ஆகிய இவற்றை எல்லாம் பச்சையாக வைத்து அரைத்துக் கடைசியில் சீரகத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.. அரைத்த அந்த விழுதைக் கொதிக்கும் புளித் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்...
4. பின்னர் கொதித்த ரசத்தை இறக்கி வைத்து உடன் கடுகையும், சீரகத்தையும் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும். தேவையானால் கருவேப்பில்லை, கொத்தமல்லி ஆகிய இவற்றையும் கழுவி சேர்த்துக் கொள்ளலாம்.
5. இதோ இப்போது சுவையான மிளகு ரசம் தயார்.
மிளகு ரசத்தை அடிக்கடி எடுத்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். பித்தம் தணியும். குழந்தைகளுக்கு நல்லது. அதனால் இந்த மழைக்காலத்தில் மிளகு ரசத்தை கண்டிப்பாக செய்துக் கொடுங்கள்..
மிளகின் நன்மைகள்
1. மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிக அளவு இருக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும்.
2. தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் அதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் திறன் நம் உடலுக்குள் நுழையும். இதனால் புதிதாக நம் உடலுக்குள் வரும் தொற்றுகளை எதிர்த்து போராடி நம் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும்.
முக்கியமான குறிப்பு
ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் இந்த ரசத்தை சாப்பிடக் கூடாது.. காராணம் காரமாக இருந்தால் அவர்களுக்கு வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணும். அதனால் அவர்களுக்கு இந்த மிளகு ரசத்தை கொடுக்காமல் இருப்பதே நல்லது..



Click it and Unblock the Notifications