Latest Updates
-
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
காலை உணவுக்கு இந்த அவல் உப்புமா செய்து சாப்பிடுங்கள்..!
அவல் உப்புமா உடலுக்கு நலம் பயக்கும்.. இது அரிசியின் இன்னொரு பரிமாணம் ஆகும்.. தென் மாவட்ட மக்கள் இதை வாரம் ஒருமுறையாவது செஞ்சு சாப்பிடுவாங்க.. சத்தான அதே நேரத்தி செய்வதற்கும் எளிதான காலை உணவாகும்.. தமிழில் அவல் என்றால் தட்டையான அரிசி அல்லது அரிசி துகள்கள் என்று அர்த்தம்.. இது இந்தியில் போஹா என்றும் அழைக்கப்படுகிறது.
அவலில் பல வகைகள் உள்ளன.. தடித்த, மெல்லிய, சிவப்பு அரிசி செதில்கள் போன்றவை. இந்த ரெசிபியில் மெல்லிய அவல் பயன்படுத்தி சொல்லப்பட்டுள்ளது.. காரணம் இந்த மெல்லிய அவல் செய்வதற்கு மிக எளிது.. நீங்கள் கெட்டியான அவல் பயன்படுத்தினால், உப்புமா செய்வதற்கு முன் ஊற வைக்க வேண்டும். அவல் அதே அளவு தண்ணீரில் கழுவி ஊற வைக்கவும். நீங்கள் அதை வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீர் அல்லது வழக்கமான வெப்பநிலையில் ஊர வைக்கலாம்... இதில் ஊறவைக்கும் நேரம் மட்டுமே வேறுபடும்..

தேவையான பொருள்கள்
1. அவல்
2. காய்ந்த மிளகாய்
3. தேங்காய்த் துருவல்
4. டேபிள் சால்ட்
5. உளுத்தம் பருப்பு
6. கடுகு
7. பெரிய வெங்காயம்
8. முந்திரிப் பருப்பு
செய்முறை
1. முதலில் அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.. பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும்.
2. பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் இவற்றைப் போட்டு வறுத்துக் கொண்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும்..
3. பின்னர் துருவிய தேங்காயையும் அதில் சேர்க்க வேண்டும்..
4. இப்போது மேலும் நன்றாகக் கிளறி கீழே இறக்கி வைத்து சுவையை கூட்ட வேண்டும் என்றால் எலுமிச்சம் பழத்தை பிழிய வேண்டும்..
5. அதே போல, ஒருவேளை உருளைக் கிழங்கைச் சேர்க்க வேண்டும் என்றால் அதனைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயை வறுத்துப் பின்பு உருளைக் கிழங்கையும் போட்டு ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அது நன்கு வதங்கிய பின்பு வெங்காயத்தையும் வதக்கி விட வேண்டும்.. பின்னர் அதில் அவல் சேர்க்க வேண்டும்.. இப்போது இன்னும் சுவையான அவல் உப்புமா ரெடி..
அவலை வேக வைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணிவதுடன் சீதபேதி போன்ற நோய்களுக்கும் நல்லது. அதுமல்ல்ட்மல்லாமல் இதில் குழந்தைகளுக்கு பிடித்தமான பாயாசம் செய்துக் கொடுக்கலாம்.. பூஜைகளில் நிவேதனமாக அவலை பொங்கலாகவும் இனிப்பாகவும் செய்து வைக்கலாம்.. முக்கியமாக கிருஷணர் கோவில்களில் அவல் அபாயாசம்தான் நிவாதம்னமாக வைப்பார்கள்..



Click it and Unblock the Notifications
