Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
மக்கன் பேடா ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே செய்யலாம்..!
கடைகளில் இனிப்பு வாங்கும்போது நம் மனதிற்குத் தோன்றுவது திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாதான். அந்த வரிசையில் ஆற்காடு மற்றும் அருகில் உள்ள பிற மாவட்ட மக்களின் மனதில் தனியிடம் பிடித்திருக்கும் இனிப்பு தான் இந்த மக்கன் பேடா. ஆம ஆற்காடு மக்கன் பேடாவை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
விஷேசங்களில் வைக்கும் பலகாரங்களில் முக்கிய இடம் பிடிக்கும் இனிப்பாக இந்த ஆற்காடு மக்கன் பேட்டாவிற்கு தனி இடம் உள்ளது.. இதற்கு உலகளவிலும் ரசிகர்கள் உள்ளனர். பண்டிகைக்குப் பலரும் வீட்டிலேயே விதவிதமான இனிப்புகளைத் தயார் செய்தாலும், விசேஷ நாட்களில் மக்கன் பேடா முக்கியமாக இடம் பெற்றிருக்கும். இது ஆற்காடு நவாப் மன்னர்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் வகையாகும்..

தேவையான பொருட்கள்:
1. மைதா-1கப்.
2. இனிப்பில்லாத கோவா-1கப்.
3. பேக்கிங் சோடா-1/2 தேக்கரண்டி.
4. வெண்ணெய்-1 தேக்கரண்டி.
5. பாதாம்-5
6. பிஸ்தா-5
7. ஆப்ரிக்காட்-5
8. முந்திரி-5
9. பூசணி விதை-சிறிதளவு.
10. பாகு செய்ய,
சர்க்கரை-2கப்.
தண்ணீர்-2 கப்.
11. குங்குமப்பூ-சிறிதளவு.
12. ஏலக்காய் பொடி-சிறிதளவு.
13. எண்ணெய்- தேவையான அளவு.
மக்கன் பேடா செய்முறை விளக்கம்
1. முதலில் ஒரு பவுலில் மைதா , இனிப்பில்லாத இல்லாத கோவா , தயிர் , வெண்ணெய் டி, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்....
2. பின்னர் பாதாம் , பிஸ்தா , முந்திரி, ஆப்ரிகாட் , பூசணி விதை சிறிதளவு ஆகியவற்றை சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது மாவை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதில் வெட்டி வைத்திருக்கும் நட்ஸை உள்ளே வைத்து மூடிவிடவும்.
3. அடுப்பில் ஃபேனை வைத்து சர்க்கரை , தண்ணீர் , குங்குமப்பூ சிறிதளவு, ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை வைத்து இறக்கி வைத்து விடவும்.
4. இப்போது அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய்விட்டு அது நன்றாக காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் மாவை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்..
5. இப்போது பொரித்து எடுத்த மக்கன் பேடாவை சர்க்கரை பாகில் 2 மணி நேரம் ஊற வைத்து எடுத்தால் நல்ல சுவையான மக்கன் பேடா ரெடி. நீங்களும் இந்த ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணிப் பாருங்க.. ரெம்ப எளிதான ஆற்காடு மக்கன் பேடாவை நீங்களே செய்து ருசித்து பாருங்கள்..
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் மக்கன் பேடாவின் விற்பனை களைகட்டி வருவதாகவும், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் தொடர்ந்து ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
