Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
வீட்டிலேயே காஜு கட்லி செய்யலாம்.. எப்படி தெரியுமா?
காஜு கட்லி ஒரு பாரம்பரிய முந்திரி ஸ்வீட் ஆகும், மேலும் இது அனைவராலும் மிகவும் விரும்பப்படும் இந்திய இனிப்புகளில் ஒன்றாகும். தீபாவளி பண்டிகையின் போது நீங்கள் வட இந்தியாவில் தங்கினால், காஜு கட்லி அல்லது உலர் பழங்கள் கொண்ட ஸ்வீட் பாக்ஸைதான் அதிகமாக பார்க்க முடியும்.. தீபாவளி பண்டிகையின் போது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பரிசாக வழங்கப்படும் மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்று இந்த காஜு கட்லி.
காஜு கட்லியை கஜு பர்ஃபி என்றும் அழைப்பர். ஆனால், கெட்டியான பர்ஃபி போலல்லாமல், காஜு கட்லி மெல்லியதாக இருக்க வேண்டும். உண்மையில் 'கட்லி' என்ற வார்த்தைக்கு 'மெல்லிய துண்டுகள்' என்று பொருள். வீட்டில் காஜு கட்லி செய்வது எளிதுதான்.. நீங்கள் முதல் முறையாக தயாரிக்கிறீர்கள் என்றால், காஜு கட்லி சரியாக வரவில்லை என்றால் பிரச்சனை இல்லை.. அடிக்கடி வீட்டில் செய்யும் போது இது எளிதாகிவிடும்.. கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.. இதோ ரெசிபி..

தேவையான பொருள்கள்
1. முந்திரிப் பருப்பு
2. தேங்காய்
3. சர்க்கரை
4. நெய் தேவையான அளவு
5. தண்ணீர் சிறிது
செய்முறை
1. முதலில் முந்திரிப் பருப்பை ஒரு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.
2. இப்போது ஊற வைத்த முந்திரிப் பருப்பை நன்கு துருவிய தேங்காய் உடன் வைத்து நன்றாக அரக்க வேண்டும்.. இந்த கலவை நன்கு சேர்ந்து கெட்டியாக வெண்ணெய் வரும் வரை அரைக்க வேண்டும்..
3. இப்போது ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போல அரைத்த அந்த விழுதை சர்க்கரையுடன் சேர்த்து விடாமல் கிளறவும். (அடிப் பிடிக்கக் கூடாது. எல்லாமே ஒன்றாக சம அளவில் சேரும் படி கிண்ட வேண்டும். கிண்டுவதில் தான் விஷயம் உள்ளது)
4. பின்னர் இரண்டு ஸ்பூன் நெய்யை விட்டு மீண்டும் நன்கு கிளறி விட வேண்டும்..
5. இப்படியாக சுமார் இருபது நிமிடங்கள் பாத்திரத்தில் ஒட்டாமல் மேற்கண்டவற்றை கிண்டி நன்கு பூத்து வரும் சமயத்தில் நெய் தடவிய அகன்ற பாத்திரத்தில் கொட்ட வேண்டும்.. தன் பின்னர் அந்த கலவையை குட்டி குட்டி துண்டுகளாக வெட்டலாம்..
6. இதோ இப்போது சுவையான முந்திரிப் பருப்பு கேக் அல்லது காஜு கட்லி தயார். இந்த ஸ்வீட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்..
7. மேலும் இந்த ஸ்வீட்டில் அதிகமாக முந்திரிதான் உள்ளது.. இந்த முந்திரிப் பருப்பு அதிக நல்ல கொலஸ்ட்ராலை தரும். அதனால் உடல் எடை அதிகம் வேண்டுபவர்கள் இதனை செய்து சாப்பிடலாம். இதில் புரதம் அதிகமாக உள்ளது. அதனால் குழந்தைகளுக்கு கொடுப்பது சிறந்தது..



Click it and Unblock the Notifications