Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
3 தக்காளி இருந்தா.. இந்த ஹோட்டல் ஸ்டைல் தக்காளி குருமாவை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
Hotel Style Tomato Kurma Recipe In Tamil: தற்போது தக்காளியின் விலை குறைவாக உள்ளது. இப்படி தக்காளி விலை குறைவாக இருக்கும் போதே, ஒருசில ரெசிபிக்களை செய்து சுவைத்து பார்த்துவிட வேண்டும். உங்களுக்கு தக்காளி ரெசிபிக்கள் பிடிக்குமானால், இட்லி, தோசைக்கு தக்காளி குருமாவை செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் ஹோட்டல் ஸ்டைல் தக்காளி குருமாவை செய்தால், இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி, பொங்கல் என்று அனைத்துடனும் சாப்பிடலாம். முக்கியமாக ஒருமுறை இப்படி தக்காளி குருமாவை செய்தால், பின் அடிக்கடி இந்த பக்குவத்தில் தான் செய்வீர்கள். குறிப்பாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப்
* முந்திரி - 4
* பச்சை மிளகாய் - 1
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தக்காளி - 3 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* புதினா - 1 கை
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், முந்திரி, பச்சை
மிளகாய், கசகசா, சோம்பு மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, 1
கை புதினாவை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, மிதமான தீயில் வைத்து, நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க
வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலாவை சேர்த்து கிளறி,
தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி,
விசில் போனதும் குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி குருமா தயார்.



Click it and Unblock the Notifications