Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
ஹோட்டல் ஸ்டைல் கைமா பரோட்டா
இன்று இரவு உங்கள் உள்ளோருக்கு ஒரு சுவையான டின்னர் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் இன்ஸ்டன்ட் பரோட்டா உள்ளதா? அப்படியானால் அந்த பரோட்டாக்களைக் கொண்டு ஹோட்டல் ஸ்டைல் கைமா பரோட்டாவை செய்து கொடுங்கள். இந்த ரெசிபி பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இது வீட்டில் உள்ளோருக்கு விருந்தளிக்கும் வகையில் அட்டகாசமான டின்னராக இருக்கும்.
உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் கைமா பரோட்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் கைமா பரோட்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* பெரிய பரோட்டா - 2
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* காய்கறிகள் - 1/2 கப் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குடைமிளகாய்,
பட்டாணி)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
வதக்கி அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1/2
* சிறிய தக்காளி - 1
* முந்திரி - 5-6
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* கல்பாசி - 1
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் காய்கறிகளை
நன்கு பொடியாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம் மற்றும்
தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் முந்திரி, கசகசா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி
இறக்க வேண்டும்.
* பின் அதில் மசாலா பொடிகளைத் தூவி கிளறி, குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பரோட்டாக்களை சிறு துண்டுகளாக பிச்சு போட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பரோட்டாக்களைப் போட்டு பொன்னிறமாக ப்ரை செய்து, தனியாக
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து காய்கறிகளை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில்
வைத்து காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் வெந்து மசாலாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், ப்ரை
செய்து வைத்துள்ள பரோட்டாக்களை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி, மேலே
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் கைமா பரோட்டா
தயார்.
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications










