Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ஹோட்டல் ஸ்டைல் சப்பாத்தி குருமா செய்வது எப்படி?
Hotel Style Chapathi Kurma: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்கள் காய்கறிகளை விரும்பி சாப்பிடும் வகையில் ஹோட்டல் ஸ்டைல் சப்பாத்தி குருமாவை செய்து கொடுங்கள்.
இந்த சப்பாத்தி குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, பரோட்டா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த குருமா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு ஹோட்டல் ஸ்டைல் சப்பாத்தி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹோட்டல் ஸ்டைல் சப்பாத்தி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (தோல் நீக்கி
துண்டுகளாக்கப்பட்டது)
* பெரிய கேரட் - 1 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* பீன்ஸ் - 8-10 (துண்டுகளாக்கப்பட்டது)
* காலிஃப்ளவர் - 3/4 கப்
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* கல்பாசி - 1
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப் பூ - 1
* புதினா - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* பச்சை மிளகாய் - 3
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1/2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 1
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3
* முந்திரி - 4-5
செய்முறை:
* முதலில் குக்கரில் நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ்
மற்றும் பச்சை பட்டாணியை எடுத்து, அதில் ஒரு கப் நீரை ஊற்றி, 1
சிட்டிகை மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதே சமயம் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் நீரை ஊற்றி, அதில் 1/4 டீஸ்பூன்
உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, காலிஃப்ளவரைப் போட்டு, பாதியாக வேக
வைத்து இறக்கி, நீரை வடிகட்டி விட்டு தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், அன்னாசிப்பூ, பிரியாணி இலை, கல்பாசி ஆகியவற்றை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு மிதமான தீயில் வைத்து 5 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி,
மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, தக்காளியை சேர்த்து,
மிதமான தீயில் வைத்து 7-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் குக்கரில் வேக வைத்துள்ள காய்கறிகள் மற்றும் காலிஃப்ளவரை
சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து 3 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பிறகு அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, கசூரி
மெத்தியை கையால் நசுக்கி மேலே தூவி, எலுமிச்சை சாற்றினை மேலே
ஊற்றினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் சப்பாத்தி குருமா தயார்.
Image Courtesy: sailusfood



Click it and Unblock the Notifications