Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா
உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு வாய்க்கு ருசியான சைடு டிஷ் செய்து வீட்டில் உள்ளோரை அசத்த விரும்புகிறீர்களா? அப்படியானால் சன்னா குருமாவை செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு வாய்க்கு ருசியான சைடு டிஷ் செய்து வீட்டில் உள்ளோரை அசத்த விரும்புகிறீர்களா? அப்படியானால் அனைவரும் விரும்பி சாப்பிடும் சன்னா குருமாவை செய்யுங்கள். அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் சன்னா குருமாவை செய்ய வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனெனில் கீழே ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமாவை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து சுவைத்து மகிழுங்கள். இந்த சன்னா குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* சன்னா/கொண்டைக்கடலை - 1 கப்
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 1
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - 1
* கறிவேப்பிலை - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப்
* இஞ்சி - 1/2 இன்ச்
* ஏலக்காய் - 1
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 1
* பூண்டு - 1 பல்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 10
* பச்சை மிளகாய் - 1
* முந்திரி - 10
செய்முறை:
* முதலில் சன்னாவை சுடுநீரில் 4-5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு போதுமான அளவு நீரை ஊற்றி 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்ஸர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, சிறிது நீர் ஊற்றி, அத்துடன் சிறிது வேக வைத்துள்ள சன்னாவை போட்டு, பேஸ்ட் போல் மென்மையாக நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
* பின் அதில் வெங்காயம், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.
* பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து ஒருமுறை வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குருமாவின் மேலே எண்ணெய் மிதக்க ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, குருமாவின் மேலே கொத்தமல்லியைத் தூவி ஒருமுறை கிளறினால், சுவையான ஹோட்டல் ஸ்டைல் சன்னா குருமா ரெடி!



Click it and Unblock the Notifications