Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தினமும் இட்லி தோசை செய்யாம புதுசா காலையில் இப்படி ஒரு டிபன் செஞ்சு கொடுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Homemade Wheat Pasta Recipe: உங்கள் வீட்டில் தினமும் இட்லி, தோசை-ன்னு தான் செய்வீங்களா? இப்படி செய்வதாலேயே உங்கள் குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு காலையில் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு டிபன் செய்து கொடுங்கள்.
அதுவும் வீட்டில் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு பாஸ்தாவை செய்து கொடுங்கள். இந்த கோதுமை பாஸ்தா சுவையானது மட்டுமின்றி ஹெல்த்தியானதும் கூட. முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு- 4 பல்
* இஞ்சி - 1 துண்டு
* பச்சை மிளகாய் - 3
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1
* குடைமிளகாய் - 1/4 கப் (நீளவாக்கில் வெட்டியது)
* தக்காளி - 1
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய்
சேர்த்து, நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு இறுக்கமாக
பிசைந்து, 10 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, ஒரு தட்டில் கோதுமை மாவை தூவி, பின் பிசைந்த
மாவை கத்தியால் சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் துண்டுகளாக்கப்பட்டதை சேர்த்து
கிளறி விட வேண்டும்.
* இப்படி ஒரு 5 நிமிடம் உயர் தீயில் வைத்து நன்கு வேக வைத்து இறக்கி,
நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் 2 முறை அலசி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் குடைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்
மசாலா மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* இறுதியாக வேக வைத்துள்ள கோதுமை பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி, 3
நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
கோதுமை பாஸ்தா தயார்.
Image Courtesy: Akshaya Kitchen Recipes



Click it and Unblock the Notifications