Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
Guava Chutney Recipe in Tamil: பெரும்பாலான தமிழ்நாட்டு வீடுகளில் காலை அல்லது இரவு உணவென்றால் அது எப்போதும் இட்லி அல்லது தோசைதான். இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷ் என்றால் அது எப்போதுமே சட்னிதான். பொதுவாக இட்லி, தோசைக்கு அனைவருக்கும் பிடித்த சட்னி என்றால் அது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னிதான். ஆனால் தினமும் இதே சட்னியை சாப்பிட்டால் நிச்சயம் போரடிக்கத்தான் செய்யும்.
நீங்கள் ஏதாவது புதிதாக சட்னி அரைக்க ஆசைப்படுகிறீர்களா? தற்போது சாலைகளில் நீங்கள் கொய்யாக்காயை அடிக்கடி பார்க்கலாம். பொதுவாக கொய்யாக்காயை நாம் மிளகாய் தூள் போட்டு அப்படியேதான் சாப்பிடுவோம். ஆனால் கொய்யாக்காயை வைத்து இட்லி, தோசைக்கு ஒரு அட்டகாசமான சட்னியை அரைக்கலாம். இந்த சட்னி வித்தியாசமாக இருப்பதுடன் குழந்தைகளுக்கும் பிடித்தது போல தனித்துவமானதாக இருக்கும்.

உங்களுக்கு வித்தியாசமான கொய்யா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொய்யா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
- 3 கொய்யாக்காய்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1/4 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 5 வர மிளகாய்
- 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
- 1 இன்ச் புளி
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- அரை ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- 1 வர மிளகாய்
செய்முறை:
- பாதி பழுத்த கொய்யாக்காய்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும். முடிந்த வரை விதை இருக்கும் பகுதிகளை தனியாக எடுத்து விடவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து நறுக்கிய கொய்யாவை அதில் போட்டு வேக வைக்கவும்.
- 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து சூடான நீரில் ஊற வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து கொய்யாவை தனியாக எடுத்து வெளியே வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி சீரகம், உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பை சேர்க்கவும்.
- பருப்பு நிறம் மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும். பருப்பு பொன்னிறமானதும் அதில் வர மிளகாயை சேர்த்து வறுக்கவும். இதை ஒரு தட்டுக்கு மாற்றி ஆற வைக்கவும்.
- பின் அதே கடாயில், நறுக்கிய சின்ன வெங்காயம், புளி மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயம் நன்றாக வதங்கி மென்மையாகும் வரை வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு தட்டில் ஆற வைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பருப்பு மற்றும் வெங்காய கலவையைச் சேர்க்கவும். தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின்னர் வேகவைத்த கொய்யாவை மிக்ஸியில் சேர்த்து, மென்மையான விழுதாக அரைக்கவும். இந்த சட்னி கெட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும், எனவே மிகவும் குறைவான அளவு தண்ணீரை சேர்க்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து வதக்கவும். கடுகு வெடித்ததும் அதை சட்னி மீது கொட்டி நன்றாக கிளறினால் சூப்பரான கொய்யா சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications