Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் பச்சை பயறும், முட்டையும் வெச்சு.. காலையில் இந்த மாதிரி தோசை சுடுங்க.. டேஸ்ட் அருமையா இருக்கும்...
Pachaipayaru Muttai Dosa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அதுவும் தோசை அதிகமாக செய்வீர்களானால், எப்போதும் ஒரே மாதிரி தோசை செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் தோசை செய்து சாப்பிட்டால் தான், தோசை வெறுத்துப் போகாமல் இருக்கும். அப்படி என்ன வித்தியாசமான தோசை சுடலாம் என்று கேட்கலாம்.
வீட்டில் பச்சை பயறு இருந்தால், அதைக் கொண்டு சத்தான தோசை சுடலாம். அதுவும் இந்த தோசையுடன் முட்டையை சேர்த்து செய்தால், இன்னும் சுவை பிரமாதமாக இருக்கும். டயட்டில் இருப்பவர்கள் சத்தான காலை உணவை சாப்பிட நினைத்தால், இந்த பச்சைபயறு முட்டை தோசையை செய்யலாம். இந்த தோசையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்றது.

உங்களுக்கு பச்சை பயறு முட்டை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு முட்டை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 1
* பாலக் கீரை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இட்லி பொடி - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பச்சை பயறை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மறுநாள் காலையில் ஊற வைத்த பச்சைப்பயறை மிக்சர் ஜாரில் போட்டு,
அத்துடன் இஞ்சி, பச்சை மிளகாய், பாலக்கீரை மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தோசை மாவு பதத்தில்
கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தயாரித்த மாவை
ஒரு கரண்டி எடுத்து தோசையாக ஊற்றி, அதன் மேலே 1 முட்டையை உடைத்து
ஊற்றி தோசையின் மேல் பரப்பி விட்டு, மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம்
மற்றும் இட்லி பொடியைத் தூவி, எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வேக வைத்து,
பின் திருப்பிப் போட்டு சிறிது நேரம் வேக வைத்து எடுத்தால், சுவையான
பச்சை பயறு முட்டை தோசை தயார்.



Click it and Unblock the Notifications