Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
1/2 கப் பச்சை பயறும், 1 கேரட்டும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இதுக்கு சைடு டிஷ்ஷே தேவைப்படாது..
Pachai Payaru Carrot Chapati Recipe In Tamil: எப்போதும் ஒரே மாதிரி டிபன் சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சப்பாத்தி என்றால் பிடிக்குமா? அப்படியானால் எந்நேரமும் ஒரே மாதிரி சப்பாத்தி செய்யாமல், ஒருமுறை பச்சை பயறும், கேரட்டும் கொண்டு சப்பாத்தி செய்யுங்கள்.
இப்படி சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ் எதுவுமே தேவைப்படாது. அப்படியே சைடு டிஷ் தேவைப்பட்டாலும், தயிர் பச்சடி போதும். முக்கியமாக இந்த சப்பாத்தியை செய்து பிள்ளைகளுக்கு டிபன் பாக்ஸில் போட்டு கொடுத்தால், மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு கேரட் சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு கேரட் சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1/2 கப் அல்லது 100 கிராம்
* கேரட் - 1 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5-6
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கோதுமை மாவு - 1 கப்
* எண்ணெய் - சிறிது
செய்முறை:
* முதலில் பச்சை பயறை நீரில் குறைந்தது 5 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து, ஊற வைத்த பச்சை பயறை மிக்சர் ஜாரில் போட்டுக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய கேரட் மற்றும் நறுக்கிய பாதி வெங்காயத்தை
சேர்த்து, பூண்டு பற்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்ததை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சீரகம், மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு, கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் கோதுமை மாவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு
பிசைந்து, 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசைந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, சப்பாத்தி மாவை மீண்டும் ஒருமுறை பிசைந்து,
சிறிது எடுத்து உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தேய்த்த
சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து
எடுத்தால், சுவையான பச்சை பயறு கேரட் சப்பாத்தி தயார்.



Click it and Unblock the Notifications