Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
1 கப் கோதுமை ரவையும், 2 ஸ்பூன் பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
Gothumai Rava Paniyaram Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி, பூரி என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? வீட்டில் கோதுமை ரவையும், பாசிப்பருப்பும் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் பணியாரத்தை சுடுங்கள்.
இந்த பணியாரம் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. மேலும் இதை காலை உணவாக மட்டுமின்றி, மாலை நேர ஸ்நாக்ஸாகவும், இரவு உணவாகவும் கூட சாப்பிடலாம். இந்த பணியாரத்தை சைடு டிஷ் ஏதும் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம். இல்லாவிட்டால் தேங்காய் சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம். ஒருமுறை இந்த பணியாரத்தை செய்தால், வீட்டில் உள்ளோர் நிச்சயம் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு கோதுமை ரவா பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை ரவை - 1 கப்
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப் + 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் 2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பை எடுத்து, அதில் நீரை
ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவையை எடுத்து, அத்துடன் 1/2 கப்
தயிர், 1/2 கப் நீரை ஊற்றி கலந்து, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள்,
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை
சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்த பாசிப்பருப்பை கழுவிவிட்டு சேர்த்து, அத்துடன்
துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியைத் தூவி நன்கு 2-3 நிமிடம்
வதக்கி இறக்க வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள கோதுமை ரவையுடன், மீண்டும் ஒரு 1/2 கப் நீரை
ஊற்றி கிளறி, பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் கரம் மசாலாவை
சேர்த்து கலந்து விட வேண்டும்.
* அடுத்து அதில் வதக்கி வைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை சேர்த்து
நன்கு கலந்து விட வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் எண்ணெய்
ஊற்றி, பின் கலந்து வைத்துள்ள கலவையை குழிகளில் ஊற்றி, மூடி வைத்து
மிதமான தீயில் வைத்து முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து
எடுத்தால், சுவையான கோதுமை ரவை பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications











