Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
1 கப் கோதுமை ரவை வெச்சு.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்டியாவும், ஹெல்த்தியாவும் இருக்கும்...
Gothumai Rava Khichdi Recipe In Tamil: காலையில் எப்பவும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாகவும், அதே சமயம் ஹெல்தியாகவும் ஏதாவது ஒரு டிபன் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா?
அப்படியானால் அந்த கோதுமை ரவையைக் கொண்டு, வழக்கமாக செய்யும் உப்புமாவை செய்யாமல், ஒருமுறை காய்கறிகளை சேர்த்து சுவையான கிச்சடி செய்யுங்கள். இந்த கிச்சடி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக டயட்டில் இருப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த காலை உணவாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவை கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவை கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சம்பா கோதுமை ரவை - 1 கப்
* எண்ண்ய - 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* பிரியாணி இலை - 2
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 5 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* முந்திரி - தேவையான அளவு
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்த, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மிளகு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம்
வதக்கி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி,
தக்காளி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, மூடி வைத்து 5
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் 5 கப் நீரை ஊற்றி,
அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து கிளறி, கொதிக்க
வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கோதுமை ரவையை சேர்த்து
கிளறி, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், சீரகம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள்,
முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள
கிச்சடியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கோதுமை ரவை கிச்சடி
தயார்.



Click it and Unblock the Notifications