Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
1 கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. சூப்பரா இட்லி சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க..
Gothumai Rava Idli Recipe In Tamil: காலையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வீட்டில் கோதுமை ரவை உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை ரவையுடன் தயிர் மற்றும் ஒருசில பொருட்களை சேர்த்து இட்லியை சுடுங்கள். மிகவும் சூப்பராக இருக்கும். இந்த கோதுமை ரவா இட்லி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
இட்லி மாவு இல்லாத சமயத்தில் டக்குன்னு ஒரு காலை டிபன் ரெடி பண்ணணும் என்றால் இந்த மாதிரி கோதுமை ரவையைக் கொண்டு இட்லி செய்யுங்கள். இதற்கு சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னியை செய்தால், இன்னும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவா இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை ரவை - 1 கப்
* தயிர் - 3/4 கப்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய கேரட் - 1-2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் தயிரை நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத்
தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து கோதுமை ரவையை சேர்த்து மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக
வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அந்த கோதுமை ரவையை தயிருடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரையும் ஊற்றி நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு துருவிய கேரட் மற்றும் சிறிது கொத்தமல்லியை சேர்த்து நன்கு
கிளறி, 3-5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக கலந்து வைத்துள்ள மாவை, இட்லி தட்டில் ஊற்றி வைத்து, 10-12
நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை ரவா இட்லி தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications