Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
கோதுமை ரவா தோசையும்.. தக்காளி பூண்டு சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Wheat Rava Dosa With Tomato Garlic Chutney: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் தோசை தான் டிபனாக இருக்குமா? ஒருவேளை தோசை மாவு இல்லாவிட்டால், கோதுமை தோசை சுடுவீர்களா? ஆனால் நீங்கள் சுடும் கோதுமை தோசை மொறுமொறுவென்று இருக்காதா?
அப்படியானால் கோதுமை தோசையை ஒருமுறை இந்த பக்குவத்தில் செய்யுங்கள். அதோடு, அதற்கு சைடு டிஷ்ஷாக தக்காளி பூண்டு சட்னியையும் செய்யுங்கள். இந்த காம்பினேஷன் மிகவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த டிபன் காம்போ காலையில் டக்கென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவா தோசையும், தக்காளி பூண்டு சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா தோசை மற்றும் தக்காளி பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவா தோசைக்கு...
* கோதுமை மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* ரவை - 1/4 கப்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 1/2 கப்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிது (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
சட்னிக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 15 பல்
* தக்காளி - 3 (நறுக்கியது)
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை மற்றும்
தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் மிளகுத் தூள், சீரகத் தூள், மிளகாய் தூள், துருவிய
இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலையை
சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து
வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் கடலைப் பருப்பு சேர்த்து நிறம் மாற வறுத்து,
பின் அதில் பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் புளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் வதக்கிய பிற பொருட்களை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெண்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி
இறக்கினால், சட்னி தயார்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
கலந்து வைத்துள்ள தோசை மாவை அள்ளி ஊற்றி, மிதமான தீயில் வைத்து,
முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், கோதுமை ரவா தோசை
தயார்.



Click it and Unblock the Notifications