Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
1 கப் கோதுமை மாவு வெச்சு.. காலையில இந்த தோசைய செய்யுங்க.. எல்லாரும் 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Gothumai Adai Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் தோசை தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தோசை சுடுவதற்கு பதிலாக, அவ்பப்போது சற்று வித்தியாசமான சுவையில் தோசை சுடலாம் அல்லவா?
அதுவும் வீட்டில் தோசை மாவு குறைவாக இருந்தால், அப்போது கைக்கொக்கும் வகையில் கோதுமை மாவைக் கொண்டு தோசை சுடுங்கள். இந்த தோசை செய்வதற்கு சுவையாக இருப்பதோடு, 10-15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு கோதுமை அடை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமாஈ? கீஅழ கோதுமை அடை தோசைரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* வெள்ளை ரவை - 1 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்ம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை -1 கொத்து
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* மஞ்சள் துள் - 2 சிட்டிகை
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பெரிய மிக்சர் ஜாரில் கோதுமை மாவு, ரவை, அரிசி மாவு,
சீரகம், உப்பு சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கி,
பின் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள், சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து
கிளறி, துருவிய தேங்காய் மற்றும் கேரட்டை சேர்த்து நன்கு 3-4 நிமிடம்
வதக்கி, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.
* பின்னர் வதக்கிய பொருட்களை கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும்
வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை அடை தோசை தயார்.



Click it and Unblock the Notifications