Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
கோதுமை தோசை செய்யும் போது இந்த ஒரு பொருளையும் சேத்துக்கோங்க.. மொறுமொறுன்னு இருக்கும்..
Wheat Rava Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் தோசை மாவு தீர்ந்து போய்விட்டதா? காலையில் என்ன டிபன் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்படியானால் அந்த கோதுமை மாவைக் கொண்டு தோசை சுடுங்கள்.
அதுவும் கோதுமை தோசையை வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக ஒருசில பொருட்களை சேர்த்து சுடுங்கள். இப்படி செய்யும் போது கோதுமை தோசை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இப்படி தோசை சுட்டால், அந்த தோசை மொறுமொறுவென்று இருக்கும்.

உங்களுக்கு கோதுமை ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* ரவை - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன் அரிசி
மாவு, ரவை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி கட்டிகளின்றி சற்று நீர்
போன்று கரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் சீரகம், மிளகு சேர்க்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை,
வெங்காயம், இஞ்சி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இந்த தோசைக்கு மாவு சற்று நீராக இருக்க வேண்டும். எனவே ரவா தோசைக்கு
கரைக்கும் மாவு போன்று சற்று அதிகமாக நீரை ஊற்றி கரைத்துக்
கொள்ளுங்கள்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
கரைத்து வைத்துள்ள மாவை அள்ளி ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக
வேக வைத்து எடுத்தால், சுவையான கோதுமை ரவா தோசை தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications