Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சிறுதானிய வெஜிடபிள் பிரியாணி ரெசிபி... இந்த சுவையான உணவு உங்க எடையையும் குறைக்க உதவுமாம்... ட்ரை பண்ணுங்க...!
Foxtail Millet Biriyani Recipe in Tamil: பொதுவாக ஆரோக்கியமான உணவென்றால் சுவையாக இருக்காது என்ற ஒரு கருத்து உண்டு, ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு தவறான கருத்தாகும். ஏனெனில் சத்தான தானியங்களை சரியான பக்குவத்தில் செய்தால் சுவையுடன் ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாக பெறலாம். தனியாங்கள் என்றாலே பொதுவாக ராகி, கேழ்வரகு போன்றவைதான் நினைவிற்கு வரும். ஆனால் இவையனைத்தையும் விட ஆரோக்கியமானது தினை அரிசி.
பொதுவாக தானியங்கள் என்றால் அதில் தோசை அல்லது கஞ்சி போன்றவைதான் செய்வார்கள், ஆனால் தினை அரிசியில் நாம் பிரியாணியே செய்யலாம். உண்மைதான் தினை அரிசியில் செய்யும் வெஜிடபிள் பிரியாணி சீரக சம்பா அரிசியில் செய்வது போன்ற சுவையில் இருக்கும். இந்த பதிவில் தினை அரிசியில் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் பிரியாணி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- தினை அரிசி - 1 கப்
- தண்ணீர் - 3 கப்
- நெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு ஏற்ப
- நறுக்கிய காய்கறிகள் - அரை கப்(கேரட், பீன்ஸ், பட்டாணி,
உருளைக்கிழங்கு)
- இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- புதினா - சிறிதளவு
செய்முறை:
- பிரியாணி இலை - 1
- ஏலக்காய் - 2
- கிராம்பு - 4
- இலவங்கப்பட்டை - 1
- அன்னாசி பூ - 1
- சீரகம் - கால் ஸ்பூன்
செய்முறை:
- தினை அரிசியை நன்றாக கழுவி, வெதுவெதுப்பான நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் கிராம்பு, ஏலக்காய் உட்பட அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து அவை வெடிக்கும் வரை வதக்கவும்.
- அதன்பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதன்பின் காய்கறிகள் மற்றும் புதினாவைச் சேர்த்து, 3 முதல் 4 நிமிடங்கள், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதன்பின் தண்ணீரை ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
- தினை அரிசியை வடிகட்டி அதை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.
- அரிசி முழுமையாக வேகும் வரை நடுத்தர முதல் குறைந்த தீயில் சமைக்கவும். தண்ணீர் நன்கு வற்றும் வரை கலவையை நன்கு கிளறி விடவும். தினை அரிசி நன்கு வெந்ததும் உப்பு பார்த்து அடுப்பை அணைக்கவும்.
- அடுப்பை அணைத்தவுடன் இறுக்கமான மூடி போட்டு 7 நிமிடம் மூடி வைக்கவும்.
- சூடான தினை அரிசி வெஜிடபிள் பிரியாணி ரெடி. தயிர் வெங்காயத்துடன் சேர்த்து சந்தோஷமாக சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications