Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
1 ஸ்பூன் ஆளி விதை இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. உடல் எடை வேகமா குறையும்...
Flaxseeds Dosa Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? டயட்டில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான அதே சமயம் சத்தான மற்றும் வாய்க்கு ருசியான டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா?
அப்படியானால் ஆளி விதை தோசையை செய்து சாப்பிடுங்கள். இந்த ஆளி விதை தோசை சுவையாக இருப்பதோடு, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். ஆனால் ஆளி விதையை உட்கொண்டால், அந்நாளில் நிறைய தண்ணீரைக் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். இந்த தோசை இனிப்பாக இருப்பதால், சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது.

உங்களுக்கு ஆளி விதை தோசை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆளி விதை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* ஓட்ஸ் - 50 கிராம் அல்லது 1 கப்
* ராகி மாவு - 50 கிராம் அல்லது 1 கப்
* முட்டை - 2
* வாழைப்பழம் - 1
* ஏலக்காய் - 1
* சுக்கு பவுடர் - 1/4 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - 2 ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
ஆளி விதைகளை சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் 50 கிராம் அல்லது 1 கப் ஓட்ஸை சேர்த்து லேசாக
வறுக்க வேண்டும்.
* பின் அத்துடன் ராகி மாவை 1 கப் சேர்த்து லேசாக வறுத்து இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த ஆளி விதைகளை சேர்த்து பொடித்துக்
கொள்ள வேண்டும். பின் அந்த ஆளி விதை பொடியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் வறுத்த ஓட்ஸ் மற்றும் ராகியை சேர்த்து, அத்துடன்
முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
* அடுத்து அதில் நன்கு கனிந்த 1 வாழைப்பழம், 1 ஏலக்காயின் விதைகள்,
சுக்கு பவுடர் மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பொடித்த ஆளி விதை பொடி மற்றும் 1 சிட்டிகை உப்பு
சேர்த்து அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* மாவானது மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி தோசை மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி எடுத்தால், சுவையான ஆளி விதை தோசை
தயார்.



Click it and Unblock the Notifications