Latest Updates
-
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
கோதுமை தோசையை ஒருமுறை முட்டை சேர்த்து இப்படி செஞ்சு பாருங்க.. சுவை அள்ளும்...
Egg Wheat Dosa Recipe In Tamil: காலையில் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? வீட்டில் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு தோசை சுடுங்கள். அதுவும் வெறும் கோதுமை தோசையை சுடுவதற்கு பதிலாக, முட்டை, தேங்காய் சேர்த்து ஒரு புதுமையான சுவையில் தோசை சுடுங்கள்.
இந்த தோசை வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த தோசைக்கு தக்காளி சட்னி, கார சட்னி என்று எது வேண்டுமானாலும் பொருத்தமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை கோதுமை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கோதுமை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* முட்டை - 1
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3/4 கப்
* கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் கோதுமை மாவு, தேங்காய், முட்டை, மஞ்சள்
தூள், பெரிய வெங்காயம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 3/4 கப்
நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி கலந்து
கொள்ளுங்கள்.
* இந்த மாவு மிகவும் நீராகவோ, கெட்டியாகவோ இருக்கக்கூடாது. தோசை மாவு
பதத்திற்கு இருக்க வேண்டும். அதன் பின் அதில் சீரகம், பொடியாக
நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தோசை பேனை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள
மாவை ஒரு கரண்டி ஊற்றி, தோசையாக சுற்றி, எண்ணெய் ஊற்றி, முன்னும்,
பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான முட்டை கோதுமை தோசை
தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications