Latest Updates
-
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா?
1 கப் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..
Egg Semiya Recipe In Tamil: காலையில் தினமும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையுடைய டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சேமியாவும், முட்டைகளும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அற்புதமான சுவையில் முட்டை சேமியாவை செய்யுங்கள்.
இந்த முட்டை சேமியா காலையில் சாப்பிட ஏற்ற சிறந்த உணவாகும். அதோடு இதை மதிய வேளையில் லஞ்ச்பாக்ஸிற்கும் கொண்டு செல்லலாம். முக்கியமாக இந்த டிபனானது பிரியாணி போன்ற மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். ஒருமுறை இந்த முட்டை சேமியாவை செய்தால், பின் அடிக்கடி இதை செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை சேமியாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சேமியா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* வறுத்த சேமியா - 1 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
முட்டை ப்ரை செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* முட்டை - 3-5
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* நெய் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 கப் நீரை ஊற்றி,
1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து, நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதித்ததும், அதில் வறுத்த சேமியாவை சேர்த்து, எண்ணெய்
ஊற்றி, சேமியாவை வேக வைக்க வேண்டும்.
* சேமியாக முழுமையாக வேகாமல் முக்காவாசி வெந்ததும், அதை இறக்கி, நீரை
வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு மற்றும்
மிளகுத் தூள் சேர்த்து ப்ரை செய்து தனியாக ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சுவைக்கேற்ப உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கிளறி, பச்சை வாசனை போக
வதக்கி வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த சேமியா மற்றும் முட்டைகளை சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து
இறக்கி, நெய் சேர்த்து கிளறினால், சுவையான முட்டை சேமியா தயார்.



Click it and Unblock the Notifications



