Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. காலையில சூப்பர் டிபன் செய்யலாம் தெரியுமா?
Egg Semiya Recipe In Tamil: காலையில் லேட்டா எழுந்துட்டீங்களா? இட்லி, தோசைக்கு மாவு இல்லையா? வீட்டில் சேமியா பாக்கெட்டும், முட்டையும் இருக்கா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு வீடே மணக்கும் அளவில் ஒரு அற்புதமான காலை டிபனை செய்யுங்கள். அது தான் முட்டை சேமியா. இந்த சேமியா பிரியாணி சுவையில் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு முட்டை பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படிதது செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* நெய் - 1/2 டீஸ்பூன்
* சேமியா - 1 பாக்கெட்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* முட்டை - 3
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* தனி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீ1பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* பிரியாணி இலை -1
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சிறிய பச்சை மிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* தண்ணீர் - 250 மிலி
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், 1 பாக்கெட் சேமியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், 3 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்
தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பொடிமாஸ் போன்று செய்து
தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, வெங்காயத்தை சேர்த்து
நிறம் மாற வதக்க வேண்டும்.
* பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் துருவிய கேரட்டை சேர்த்து கிளறி, நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, கொதிக்க விட வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து
கிளறி, கொத்தமல்லியைத் தூவி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து, மூடி
வைத்து வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, மேலே முட்டையை சேர்த்து நன்கு
கிளறி இறக்கினால், சுவையான முட்டை சேமியா தயார்.
Image Courtesy: Dindigul Food Court



Click it and Unblock the Notifications








