Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
2 முட்டையும், சேமியாவும் இருந்தா.. காலையில இந்த டிபனை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...
Egg Semiya Biryani Recipe In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே அனைவருக்கும் குஷி தான். ஏனெனில் அப்போது தானே வாய்க்கு ருசியாக சமைத்து, பொறுமையாக சுவைத்து சாப்பிட முடியும். அதுவும் காலையில் இட்லி, கறிக்குழம்பை செய்வதற்கு பதிலாக, வீட்டில் சேமியாவும், முட்டையும் இருந்தால், அவற்றைக் கொண்டு முட்டை சேமியா பிரியாணியை செய்து சாப்பிடுங்கள்.
இந்த முட்டை சேமியா பிரியாணி நிச்சயம் உங்கள் விடுமுறை கொண்டாடும் வகையில் சுவையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். வெறும் 10 நிமிடத்தில் இதை செய்துவிடலாம்.

உங்களுக்கு முட்டை சேமியா பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை சேமியா பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 2
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* வறுத்த சேமியா - 1 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் மிளகாய் தூள் மற்றும்
உப்பு சேர்த்து நன்கு பொடிமாஸ் செய்து, தனியாக ஒரு பௌலில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை
போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு
கிளறி , 3 நிமிடம் கிளற விட வேண்டும்.
* அடுத்து அதில் 2 கப் நீரை ஊற்றி, நீரை கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சேமியாவை சேர்த்து கிளறி, மூடி
வைத்து குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால்
முட்டை சேமியா பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications