Latest Updates
-
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
2 முட்டை இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல குழந்தைகளுக்கு இப்படி பக்கோடா செஞ்சு குடுங்க..
Egg Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் பிள்ளைகளுக்கு பக்கோடா என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் பக்கோடா செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் பக்கோடா செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை பக்கோடா செய்வதாக இருந்தால், வீட்டில் 2 முட்டை இருந்தால், அதைக் கொண்டு பக்கோடா செய்து கொடுங்கள்.
என்னது முட்டையில் பக்கோடாவா என்று கேட்கலாம். இந்த பக்கோடா சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகளும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். எப்போது ஒரே மாதிரி செய்து போரடித்திருந்தால், இப்படியான வித்தியாசமான ரெசிபியை அடிக்கடி ட்ரை செய்து குழந்தைகளை அசத்துங்கள்.

உங்களுக்கு முட்டை பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 2
* கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் பவுடர் - 2 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* மிளகாய் தூள் - சிறிது
* மிளகுத் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கிண்ணத்தில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கட்டிகளின்றி
நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை
சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு தட்டையான பேனை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அடித்து வைத்துள்ள முட்டை
கலவையை ஒரு கரண்டியில் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெயில் ஆங்காங்கு
ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து
முட்டை கலவையையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக அந்த பொரித்த முட்டையுடன் சிறிது மிளகுத் தூள் மற்றும்
மிளகாய் தூள் சேர்த்து நன்கு குலுக்கினால், சுவையான முட்டை பக்கோடா
தயார்.



Click it and Unblock the Notifications