Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
மழை நேரத்துல 1 கப் சேமியா இருந்தா.. காபி, டீ குடிக்கும் போது இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
Semiya Pakoda Recipe In Tamil: தற்போது அடிக்கடி மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. அதுவும் மாலை வேளையில் மழை பெய்யும் வேளையில் காபி, டீ குடித்துக் கொண்டே மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட்டால், அவ்வளவு இதமாக இருக்கும். இப்படியான சூழ்நிலையில் பலரும் பஜ்ஜி, போண்டா, வடை என்று தான் செய்து சாப்பிடுவோம்.
அதுவும் வழக்கமாக செய்வது போன்று ஒரே மாதிரியாகத் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் சற்று வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தால், வீட்டில் 1 கப் சேமியா இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இந்த பக்கோடா நன்கு மொறுமொறுவென்று ருசியாக இருக்கும். முக்கியமாக 10 நிமிடத்தில் டக்கென்று செய்யக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு சேமியா பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேமியா பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேமியா - 1 கப்
* சின்ன வெங்காயம் - 10-15
* பச்சை மிளகாய் - 3
* பூண்டு - 5-8 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலை மாவு - 1 12 கப்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் 1
டீஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சேமியாவை சேர்த்து 2
நிமிடம் வேக வைத்து இறக்கி நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில்
ஒருமுறை அலசி வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடி உரலில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு தட்டி, ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே உரலில் பச்சை மிளகாயை சேர்த்து இடித்து, அதையும்
தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு இடித்து, அதையும்
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் தட்டி வைத்துள்ள சின்ன வெங்காயம், பச்சை
மிளகாய், இஞ்சி பூண்டு சேர்க்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்த்து, அத்துடன்
சீரகம், சோம்பு, பெருங்காயத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,
சுவைக்கேற்ப உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்க்க
வேண்டும்.
* அடுத்து அதில் கடலை மாவை சேர்த்து கைகளால் பிசைந்து விட
வேண்டும்.
* பின் அதில் நல்ல சூடான எண்ணெயை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்துள்ள சேமியாவை சேர்த்து, சிறிது நீரை
தெளித்து, பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து எண்ணெயில் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,
சுவையான சேமியா பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications