Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
4 முட்டை இருந்தா போதும்... இந்த மாதிரி முட்டை குழம்பு வைச்சா பைவ் ஸ்டார் ஹோட்டலே தோத்து போயிரும்...!
Egg Curry Recipe in Tamil: சாதம், சப்பாத்தி, மற்றும் தோசைன்னு எல்லாத்துக்கும் பண்ணுற ஒரு குழம்புன்னா அது முட்டை குழம்பு தான். இது எல்லாருக்கும் பிடிச்ச ஒண்ணு. பெரும்பாலும் முட்டை குழம்புன்னா முட்டையை குழம்பு உடைத்து விட்டு வேக வைப்போம். இல்லனா வேக வைத்த முட்டையை சேர்த்து கிரேவி செய்வோம். ஆனால் இந்த மாதிரி முட்டை குழம்பு செய்து பாருங்க வழக்கமாக இல்லாம சுவையும் சூப்பரா இருக்கும். வாங்க எப்படி ஆம்லெட் முட்டை குழம்பு செய்றதுன்னு இங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
குழம்புக்கு:
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- சோம்பு - ½ டீ ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- வெங்காயம் - 1 (மீடியம்)
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- மஞ்சள்த்தூள் - ½ டீ ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- சீரகத்தூள் - ½ டீ ஸ்பூன்
- கரம் மசாலா - ½ டீ ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - ½ டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய்ப்பால் - ½ கப்
அரைக்க:
- கொத்தமல்லி விதை - 2 டீ ஸ்பூன்
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- மிளகு - 1 1 டீ ஸ்பூன்
- சீரகம் - ½ டீ ஸ்பூன்
- முந்திரி - 4
- பட்டை - 1(சிறியது அல்லது 2 இன்ச் அளவு)
- வரமிளகாய் - 1
- பச்சை மிளகாய் - 1
- பூண்டு - 5 பல்
- இஞ்சி - ஒரு இன்ச் அளவு
- வெங்காயம் - 1 (மீடியம்)
- தக்காளி - 1 பெரியது அல்லது 2 சிறியது
- கொத்தமல்லி - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
ஆம்லெட் செய்ய:
- முட்டை - 4
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
- வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- நன்கு பழுத்த தக்காளி பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி
கொள்ளவும்.
- பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நறுக்கிய வெங்காயம்,
பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- அதனுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு
சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
- தாளிப்பு கரண்டியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து காயவிடவும்.
- பின் அடித்து வைத்த முட்டையை சிறிது சிறிதாக சேர்த்து இரண்டு
பக்கமும் வேக வைத்து ஆம்லெட்கள் செய்து கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, சீரகம்,
மற்றும் முந்திரி சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் பட்டை, வரமிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் இஞ்சி
சேர்க்கவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி மற்றும்
கருவேப்பிலை சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தேவையான அளவு
எண்ணெய் காயவிடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சோம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து
பொரிய விடவும்.
- பின் அதனுடன் வரமிளகாய், நறுக்கிய வெங்காயம், மற்றும் கருவேப்பிலை
சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின் அதில் மஞ்சள்த்தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,
சீரகத்தூள், கரம் மசாலா, மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசம்
போகும் வரை வதக்கி கொள்ளவும்.
- அதனுடன் அரைத்து வைத்த கலவை மற்றும் தேவையான அளவு தண்ணீர் மற்றும்
உப்பு சேர்த்து எண்ணெய் பிரித்து வரும் வரை கொதிக்க விடவும்.
- பின் அதனுடன் தேங்காய் பால் சேர்க்கவும்.
- இப்போது ஆம்லெட்களை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் 10
நிமிடங்களுக்கு வைக்கவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ஆம்லெட்
குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications