Latest Updates
-
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
1/2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி ஒருடைம் பூரி செஞ்சு சாப்பிடுங்க.. செம ருசியா இருக்கும்..
Drumstick Leaves Poori Recipe In Tamil: உணவில் கீரையை அடிக்கடி சேர்ப்பது நல்லது. அதுவும் வாரத்திற்கு 2 முறையாவது கீரையை உட்கொண்டு வந்தால், பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். கீரைகளில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு கீரை தான் முருங்கைக்கீரை. இந்த கீரையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இப்படிப்பட்ட முருங்கைக்கீரையை இதுவரை நீங்கள் பொரியல், சாம்பார் என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் அந்த முருங்கைக்கீரையைக் கொண்டு பூரி செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? இந்த முருங்கைக்கீரை பூரி செய்வதற்கு சுலபமாக இருக்கும். விடுமுறை நாட்களில் ஸ்பெஷலாக ஏதாவது சாப்பிட நினைத்தால், இந்த பூரியை செய்து சாப்பிடலாம். இந்த பூரிக்கு வெஜ் குருமா அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை பூரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை பூரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* முருங்கைக்கீரை - 1/2 கைப்பிடி
பூரிக்கு...
* கோதுமை மாவு - 2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைகேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சிறுதுண்டு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும்
முருங்கைக்கீரையை எடுத்து, அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய், 1/2
டீஸ்பூன் ஓமம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பூரி
மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை 10 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி,
தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு
பொரித்து எடுத்தால், முருங்கைக்கீரை பூரி தயார்.
Image Courtesy: Savithri Samayal



Click it and Unblock the Notifications