Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. சுவையானதும், சத்தானதும் கூட...
Murungai Keerai Dosa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி, தோசை தான் செய்வீர்களா? எப்போதும் வெறும் இட்லி, தோசையை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் முருங்கைக்கீரை இருந்தால், அதைக் கொண்டு முருங்கைக்கீரை தோசை சுடுங்கள். முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
முக்கியமாக இந்த முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் இரத்தம் நன்கு ஊறி, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். உங்கள் வீட்டில் உள்ளோர் முருங்கைக்கீரையை சாப்பிட மறுப்பார்கள் என்றால், அவர்களுக்கு முருங்கைக்கீரையைக் கொண்டு இப்படி தோசை சுட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முருங்கைக்கீரை தோசைக்கு தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* சின்ன வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 1
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 2 சிட்டிகை
* தண்ணீர் - சிறிது
* தோசை மாவு - 1 கப்
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் முருங்கைக்கீரையை நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கழுவி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து, சிறிது
உப்பு தூவி, கீரை சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* கீரை நன்கு சுருங்கியதும், அதை இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில்
போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் தோசை மாவை எடுத்து, அத்துடன் அரைத்து
வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து
வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி, வேக வைத்து
எடுத்தால், சுவையான முருங்கைக்கீரை தோசை தயார்.



Click it and Unblock the Notifications