Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
எப்பவும் ஒரே மாதிரி சிக்கன் குருமாவை செய்யாம... ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்...
Drumstick Chicken Kurma Recipe In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே காலையில் இட்லி, பூரி என்று ஏதாவது செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கன் அல்லது மட்டனை குருமா அல்லது கிரேவி செய்து சாப்பிட்டால் தான் நிறைய பேருக்கு அந்த விடுமுறை நாள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கும் அப்படி தானா? இன்று உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது பூரி செய்யப் போகிறீர்களா?
அப்படியானால் சிக்கனை வாங்கி குருமா செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்யும் சிக்கன் குருமாவை செய்யாமல், சற்று வித்தியாசமாக முருங்கைக்காய் சேர்த்து சிக்கன் குருமாவை செய்யுங்கள். இந்த சிக்கன் குருமா நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுவும் இது இட்லி, பூரிக்கு மட்டுமின்றி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்காய் சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் சிக்கன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* முருங்கைக்காய் - 1
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* புதினா இலைகள் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5
* தக்காளி - 1
* இஞ்சி - 3 துண்டு
* பூண்டு - 5 பல்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 5
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, பின் புதினா,
பச்சை மிளகாய் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, 5 சின்ன வெங்காயம், தக்காளி,
துருவிய தேங்காய், முந்திரி, கசகசா, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மசாலாவை குக்கரில் உள்ள சிக்கனுடன் சேர்த்து,
குருமாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
துண்டுகளாக்கப்பட்ட முருங்கைக்காயையும் சேர்த்து கிளறி, குக்கரை மூடி
2 விசில் விட்டு இறக்கினால், சுவையான முருங்கைக்காய் சிக்கன் குருமா
தயார்
Image Courtesy: Sharmis Passions



Click it and Unblock the Notifications