Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தீபாவளி ஸ்பெஷல் ரசமலாய் ரெசிபி
இந்த வருட தீபாவளிக்கு நீங்கள் சற்று வித்தியாசமான ரெசிபிக்களை செய்ய விரும்பினால், உங்கள் தீபாவளி பலகாரங்களின் பட்டியலில் ரசமலாய் ரெசிபியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
தீபாவளி பண்டிகை நெங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் பலகாரங்களை செய்ய திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள். பொதுவாக தீபாவளி பலகாரம் என்றாலே நினைவிற்கு வருவது, முறுக்கு, அதிரசம், சீடை, மைசூர்பாக் போன்றவை தான். ஆனால் இந்த வருட தீபாவளிக்கு நீங்கள் சற்று வித்தியாசமான ரெசிபிக்களை செய்ய விரும்பினால், உங்கள் தீபாவளி பலகாரங்களின் பட்டியலில் ரசமலாய் ரெசிபியை சேர்த்துக் கொள்ளுங்கள். இது ஒரு வட இந்திய ரெசிபியாக இருந்தாலும், இதன் சுவையால் உலகெங்கிலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவையான ஸ்வீட்டாக உள்ளது.

எனவே இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டில் ரசமலாய் செய்ய விரும்பினால், அதன் எளிமையான செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். முக்கியமாக உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறவாதீர்கள்.
MOST READ: தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு சீனி பணியாரம்
தேவையான பொருட்கள்:
ரசகுல்லா செய்ய...
* பால் - 1 லிட்டர்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ரசமலாய் செய்ய...
* பால் - 3 கப்
* கண்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* நறுக்கிய நட்ஸ் (பாதாம், பிஸ்தா, முந்திரி) - 3 டேபிள் ஸ்பூன்
* குங்குமப்பூ - 3 சிட்டிகை
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
செய்முறை:
* முதலில் ரசகுல்லா செய்ய ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, நன்கு சுண்ட காய்ச்சவும். பின் அதில் எலுமிச்சை சாற்றினை சேர்க்கவும். இப்போது பால் திரிந்து போயிருக்கும்.
* இந்நிலையில் அந்த திரிந்த பாலை ஒரு துணியில் கட்டி, நீரை வடித்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடத்திற்கு பின், அந்த பன்னீரை சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, அதில் பால் மற்றும் கண்டென்ஸ்ட் மில்க் ஊற்றி கொதிக்க விடவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், மிதமான தீயில் பாலை கொதிக்க விடவும்.
* பால் கெட்டியாகி, பாதியாக குறைவதற்குள், ஒரு சிறிது கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் பாலை எடுத்து, அதில் குங்குமப்பூ சேர்த்து கரைய விடுங்கள்.
* பால் பாதியாக குறைந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூ பால் சேர்த்து கிளறி விடுங்கள். பின் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறிவிடுங்கள்.
* பின்பு நெருப்பை குறைத்து, இன்னும் பாலை சுண்ட விடுங்கள். அதற்குள் ஒரு வாணலியில் நெய் ஊற்றி, நட்ஸ்களை போட்டு ப்ரை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
* பால் ஓரளவு சுண்டியதும், அதில் ப்ரை செய்து வைத்துள்ள நட்ஸ் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடுங்கள்.
* இப்போது தயாரித்து வைத்துள்ள ரசாகுல்லாக்களைப் போட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து, அடுப்பை அணைத்துவிட்டு, நன்கு குளிர விடுங்கள். இப்போது சுவையான ரசமலாய் தயார்!
குறிப்பு:
* குங்குமப்பூவை அதிகமாக சேர்த்துவிட வேண்டாம். இல்லாவிட்டால், அது ரசமலாய் சுவையையே கெடுத்துவிடும்.
* கண்டென்ஸ்டு மில்க் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்தால், ரசமலாய் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
* ரசமலாய் தயாரித்த பின், அதை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பின் பரிமாறினால், இன்னும் சுவை அற்புதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications