Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வெள்ளரிக்காய் தோசை ரெசிபி... கோவாவில் பிரபலமான இந்த தோசை செய்ய தோசை மாவே வேணாம்...!
Cucumber Dosa Recipe in Tamil: தோசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது, அதனால்தான் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் தோசை பிரதான உணவாக இருக்கிறது. தோசையிலேயே பல வகைகள் உண்டு, இவற்றில் பெரும்பாலானவை சாதாரண தோசை மாவு மீது முட்டை அல்லது காய்கறிகளை சேர்த்து வெரைட்டி தோசை செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி ராகி, கேழ்வரகு போன்றவை மாவுடன் சேர்க்கப்பட்டு ஆரோக்கியமான சிறுதானிய தோசை செய்யப்படுகிறது. ஆனால் இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது முற்றிலும் வித்தியாசமான தோசை. கோவா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பிரபலமான இந்த தோசை சாதாரண தோசை மாவை பயன்படுத்தாமல் வெள்ளரிக்காய் வைத்து தயாரிக்கப்படுகிறது.

இந்த வெள்ளரிக்காய் தோசை செய்ய மிகக் குறைவான பொருட்களும், நேரமும் தேவைப்படும், ஆனால் நிறைவாகவும் சுவையாகவும் இருக்கும். சுவையுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும் இந்த தோசையை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- ஒன்றரை கப் துருவிய வெள்ளரிக்காய்
- 3 பச்சை மிளகாய்
- ஒரு துண்டு இஞ்சி துருவியது
- 2 கப் ரவை
- அரை கப் கோதுமை மாவு
- அரை கப் துருவிய தேங்காய்
- 1 ஸ்பூன் வெல்லம்
- உப்பு தேவைக்கேற்ப
- 1 கப் தண்ணீர் அல்லது கால் கப் தயிர்
- தோசை சுட நெய் அல்லது எண்ணெய்
செய்முறை:
- ஒரு பெரிய பாத்திரத்தில் வெள்ளரிக்காயை துருவி எடுத்து
வைத்துக்கொள்ளவும். துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை இதனுடன்
சேர்க்கவும்.
- இதில் ரவை, கோதுமை, தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து நன்றாக
கலந்து கொள்ளவும்.
- பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்க்கவும்.
- மாவை நீர்ப்பதத்திற்குக் கொண்டு வர 1 கப் தண்ணீர் அல்லது 1/4 கப்
தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். அதிக தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவு
நன்கு கெட்டியாக இருக்க வேண்டும். தோசையின் சுவை நன்றாக இருக்க தயிர்
சேர்ப்பது நல்லது.
- இப்போது வெள்ளரிக்காய் தோசைக்கான மாவு ரெடி.
- தோசைக்கல்லை எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி அதில் ஒரு
கரண்டி மாவை ஊற்றி அதனை தோசை போல சுற்றவும்.
- இப்போது தோசை மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஒரு மூடியால் மூடி வைத்து
வேக விடவும்.
- வெந்ததும் தோசையை திருப்பி போட்டு வெந்ததும் அடுப்பை
அணைக்கவும்.
- வெள்ளரிக்காய் தோசை ரெடி இதை பட்டர் தொட்டு வெறுமனே சாப்பிடலாம்
அல்லது தேங்காய் சட்னி அல்லது காரசட்னி வைத்தும் சாப்பிடலாம் .
- குழந்தைகளுக்கு காலை நேரத்தில் அவசரமாக செய்து கொடுக்க சுவையான
மற்றும் ஆரோக்கியமான ரெசிபியாக இது இருக்கும்.
- நீங்கள் மாவை இரவில் தயாரித்து, காலையில் பயன்படுத்தும் வரை
பிரிட்ஜில் வைக்கலாம். இந்த மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்தால்
இரண்டு நாட்களுக்கு வரை நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications