Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
15 நிமிடத்தில் மொறுமொறுப்பான.. ஆனியன் ரவா தோசை - எப்படி செய்யணும் தெரியுமா?
Crispy Onion Rava Dosai Recipe In Tamil: பொதுவாக தோசை பிரியர்களுக்கு ரவா தோசை என்றால் ரொம்ப பிடிக்கும். அதுவும் உங்கள் வீட்டில் உள்ளோர் ரவா தோசை பிரியர்கள் என்றால், நிச்சயம் அடிக்கடி இந்த தோசையை செய்வீர்கள். ஆனால் சில சமயங்களில் ரவா தோசை சரியான பக்குவத்தில் வராது. அப்படி வரவில்லை என்றால், அதற்கு சரியான பக்குவத்தில் பொருட்களை எடுக்காதது தான்.
அதோடு ரவா தோசையின் சுவையை மேலும் அதிகரிக்க விரும்பினால், ரவா தோசை மாவுடன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து, சுடுங்கள். இதனால் தோசையின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். மேலும் இந்த தோசைக்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும்.

உங்களுக்கு சரியான பக்குவத்தில் ஆனியன் ரவா தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆனியன் ரவா தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* அரிசி மாவு - 1 கப்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
சட்னிக்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் ரவை, 1 கப் அரிசி மாவு மற்றும்
2 டேபிள் ஸ்பூன் மைதா மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை
சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் சீரகம், மிளகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கட்டிகளின்றி
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதற்குள் சட்னி செய்யலாம். அதற்கு மிக்சர் ஜாரில் 1 கப் துருவிய
தேங்காய், 3 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை, சிறிய துண்டு இஞ்சி, 3 பச்சை
மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளற வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
கலந்து வைத்துள்ள மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து,
வேண்டுமானால், சிறிது நீரை ஊற்றி நன்கு கலந்து, ஒரு கரண்டி மாவை
எடுத்து கல்லில் ஊற்ற வேண்டும்.
* பின் அதில் எண்ணெய் ஊற்றி, மொறுமொறுப்பானதும், திருப்பிப் போடாமல்
மடித்து எடுத்தால், சுவையான வெங்காய ரவா தோசை தயார்.



Click it and Unblock the Notifications







