Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சுவையான... க்ரீமி கேரட் சூப்
குளிர்காலத்தில் சூப் குடிப்பது மிகவும் நல்லது. அதிலும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கரோட்டின் நிறைந்த கேரட்டைக் கொண்டு சூப் தயாரித்துக் குடிப்பது இன்னும் நல்லது.
குளிர்காலத்தில் சூப் குடிப்பது மிகவும் நல்லது. அதிலும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கரோட்டின் நிறைந்த கேரட்டைக் கொண்டு சூப் தயாரித்துக் குடிப்பது இன்னும் நல்லது. இந்த கேரட் சூப் குடிப்பதால் கண்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். உங்களுக்கு சுவையான கேரட் சூப் செய்ய தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது தான்.

ஏனெனில் கீழே க்ரீமி கேரட் சூப்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டைல் கேரட் சூப் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இப்போது கேரட் சூப்பின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: மீல் மேக்கர் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள்:
* கேரட் - 3 (பொடியாக நறுக்கியது)
* பால் - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப் + 1/2 கப் கேரட்டை வேக வைப்பதற்கு
* பூண்டு - 5 பல்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* க்ரீம் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* பின் அதில் கேரட், 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* பின்பு அதில் கேரட் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, கேரட்டை நன்கு மென்மையாக வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதில் உள்ள பிரியாணி இலை, பட்டை, கிராம்பை எடுத்து விட்டு, மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அரைத்த கேரட் பேஸ்ட் மற்றும் நீர் ஊற்றி நன்கு கட்டி இல்லாமல் கிளறி விடுங்கள்.
* சூப் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பால், 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் க்ரீம் சேர்த்தால், க்ரீமி கேரட் சூப் தயார்.



Click it and Unblock the Notifications