Latest Updates
-
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா?
கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட்
நீங்கள் எப்போதும் சிக்கனைக் கொண்டு ஒரே மாதிரியான சமையலை செய்பவராயின், இந்த வாரம் சற்று வித்தியாசமான அதே சமயம் சுவையான ஒரு சிக்கன் ரெசிபியை முயற்சித்துப் பாருங்கள். அது தான் கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட்.
சிக்கனைக் கொண்டு பல சுவையான சமையலை செய்யலாம். நீங்கள் எப்போதும் சிக்கனைக் கொண்டு ஒரே மாதிரியான சமையலை செய்பவராயின், இந்த வாரம் சற்று வித்தியாசமான அதே சமயம் சுவையான ஒரு சிக்கன் ரெசிபியை முயற்சித்துப் பாருங்கள். அது தான் கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட். இது ரசம் சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

உங்களுக்கு கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி இலைகள் - 3/4 கப் (நன்கு பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு பிரட்டி, ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு மணிநேரம் கழித்த பின், ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கனைப் போட்டு பிரட்டி, குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் வேகும் போது அடிக்கடி கிளறி விட வேண்டும். இதனால் சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்கும்.
* சிக்கன் நன்கு வெந்துவிட்டால், அடுப்பை அணைத்து பேனை இறக்க வேண்டும். இப்போது சுவையான கொத்தமல்லி சிக்கன் ரோஸ்ட் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications