Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம்
எப்பவும் ஒரே மாதிரி தோசை சுடாம.. ஒருவாட்டி தேங்காய் சீரக தோசை சுடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Coconut Jeera Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் தோசை செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை வித்தியாசமான சுவையில் தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த தோசை செய்ய பச்சரிசியை ஊற வைத்து, பிரஷ்ஷாக மாவை அரைத்து, அத்துடன் ஒருசில பொருட்களை அரைத்து சேர்த்து கலந்து, தோசையாக சுட வேண்டும்.
இப்படி சுடும் தோசையை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த தோசையை காலை வேளையில் மட்டுமின்றி, மாலை நேர ஸ்நாக்ஸாகவும், இரவு டின்னராகவும் சாப்பிடலாம். குறிப்பாக இந்த தோசை குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தேங்காய் சீரக தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சீரக தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப் + தேவையான அளவு
* தேங்காய் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 10
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவி, நீரை ஊற்றி 3-4
மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சரிசியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் பொடியாக நறுக்கிய தேங்காய், சின்ன வெங்காயம்,
சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரவென்று அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்க்க வேண்டும்.
* பின்னர் மாவில் நீரை ஊற்றி, நீர் தோசை பதத்திற்கு மாவை தயார் செய்து
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
தயாரித்து வைத்துள்ள மாவை ரவா தோசைக்கு அள்ளி ஊற்றுவது போன்று கல்லி
ஊற்றி, மூடி வைத்து தோசையை வேக வைத்து, பின் மூடியைத் திறந்து தோசையை
எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால்,
சுவையான தேங்காய் சீரக தோசை தயார்.



Click it and Unblock the Notifications