Latest Updates
-
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும் -
பரோட்டா கடை வெஜ் சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
திருமண சீசனில் தங்கம் விலை திடீர் உயர்வு: பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்கள்! -
ஜூன் 15-ல் உருவாகும் அரிய புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
ஆண்களே! சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
இந்தியாவின் டாப் 5 பணக்கார முதலமைச்சர்கள் இவங்கதான் - தமிழ்நாடு முதலமைச்சர் எத்தனாவது இடத்தில் உள்ள தெரியுமா? -
காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்.. -
வெயில் மற்றும் மழையால் வீட்டில் புழுக்கமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்..
தினமும் காலையில் இந்த ரொட்டியை ஒன்னு சாப்பிடுங்க.. உடல் எடை வேகமாக குறைஞ்சு ஒல்லியாவீங்க..
Chola Rotti Recipe In Tamil: நீங்க குண்டா இருக்கீங்களா? உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அதற்காக காலையில் ஓட்ஸ் போன்ற உணவை உட்கொண்டு வருகிறீர்களா? ஆனால் உங்களுக்கு ஓட்ஸ் பிடிக்காதா? அதற்கான சிறந்த மாற்று காலை உணவை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?
அப்படியானால் முழு தானியங்கள் மற்றும் சிறு தானியங்களை காலை உணவாக உட்கொள்ளுங்கள். அதுவும் சோளத்தைக் கொண்டு ரொட்டி செய்து சாப்பிட்டால், உடல் எடையில் இன்னும் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த சோள ரொட்டியை காலையில் உட்கொண்டு வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிறைந்திருக்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் ஏற்படாது.

உங்களுக்கு சோள ரொட்டியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோள ரொட்டி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சோள மாவு - 1 கப்
* கோதுமை மாவு - 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* பாலக் கீரை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் கோதுமை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள்,
மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பாலக்கீரை, கொத்தமல்லி, தயிர்,
பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக சுடுநீரை ஊற்றி கிளறி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு 5 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவிக் கொள்ள
வேண்டும். பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து உருட்டி, இலையில் வைத்து,
கைகளில் எண்ணெய் தடவி தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தட்டி
வைத்துள்ள ரொட்டியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான சோள ரொட்டி தயார். இதேப் போன்று அனைத்து
மாவையும் ரொட்டியாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications