Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
1/2 கப் சோளம் இருந்தா.. இப்படி கஞ்சி செஞ்சு தினமும் காலையில் 2 கப் குடிங்க.. உடல் எடை வேகமா குறையும்...
Chola Kanji For Weight Loss In Tamil: உங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? அதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் டயட்டில் சோளத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் சோளத்தைக் கொண்டு காய்கறிகள் சேர்த்து கஞ்சி தயாரித்து குடித்து வரும் போது, உடலில் தேங்கியுள்ள விடாப்பிடியான கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை வேகமாக குறையும்.
தசைகள் வலுபெறும். மலச்சிக்கல் நீங்கும். முக்கியமாக இந்த சோள கஞ்சி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு ருசியாக இருக்கும்.

உங்களுக்கு சோள கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோள கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை சோளம் - 1/2 கப்
* வெங்காயம் - 1
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* காலிஃப்ளவர் - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 2 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் 1/2 கப் வெள்ளை சோளத்தை இரவு தூங்கும் போது நீரில் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மறுநாள் காலையில் அந்த சோளத்தை ஜாரில் சேர்த்து, நன்கு ரவை
பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஜாரில் வெங்காயம், பூண்டு, இஞ்சியை சேர்த்து ஒருமுறை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள சோளத்தை சேர்த்து, நன்கு வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ்,
முட்டைக்கோஸ் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் 2 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி
கொதிக்க வைக்க வேண்டும்.
* அதுவும் கஞ்சியை 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து மூடி வைத்து,
நன்கு கொதித்ததும், அதில் மிளகுத் தூள் நறுக்கிய கொத்தமல்லி மற்றும்
பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறி, சுவையான சோள கஞ்சி
தயார்.



Click it and Unblock the Notifications