Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
எப்பவும் ஒரே மாதிரி தோசை செய்யாம.. ஒருமுறை இந்த கொண்டைக்கடலை தோசையை ட்ரை பண்ணுங்க..
Chickpeas Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி தோசை செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில், தோசையை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான ஒரு தோசை செய்ய வேண்டுமா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் நிறைந்த வெள்ளை கொண்டைக்கடலைக் கொண்டு தோசை சுடுங்கள்.
இந்த கொண்டைக்கடலை தோசை மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த தோசைக்கான மாவானது வழக்கமாக சுடும் தோசை போன்றே, அரைத்து புளிக்க வைக்க வேண்டும்.

உங்களுக்கு கொண்டைக்கடலை தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொண்டைக்கடலை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை கொண்டைக்கடலை - 2 கப்
* இட்லி அரிசி - 2 கப்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* இஞ்சி - 1 துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கொண்டைக்கடலையை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அத்துடன் 2 கப் இட்லி அரிசியை சேர்க்க வேண்டும்.
* பிறகு இவ்விரண்டையும் நீரில் 2 முறை அலசி, பின் நீரை ஊற்றி,
வெந்தயத்தை சேர்த்து குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 8 மணிநேரம் கழித்து, ஊற வைத்ததை மிக்சர் ஜார் அல்லது கிரைண்டரில்
சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத் மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் தேவையான அளவு உப்பு
சேர்த்து நன்கு கலந்து விட்டு, அந்த மாவை குறைந்தது 8 மணிநேரம் ஊற
வைத்து புளிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், மாவை
ஊற்றி தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும்
பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான கொண்டைக்கடலை தோசை
தயார்.
Image Courtesy: Apoorvaa's Virundu



Click it and Unblock the Notifications