Latest Updates
-
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
இட்லி, தோசைக்கு இந்த செட்டிநாடு தக்காளி சட்னியை ஒருதடவை அரைச்சு பாருங்க... சுருக்குனு சூப்பரா இருக்கும்...!
Chettinad Tomato Kara Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னியை தான் சைடு டிஷ்ஷாக அதிகம் செய்வீர்களா? குறிப்பாக சட்னி என்றால் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை அதிகம் செய்வீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார சட்னி பிடிக்குமானால், எப்போதும் ஒரே சுவையில் கார சட்னியை செய்யாமல், ஒருமுறை செட்டிநாடு ஸ்டைல் தக்காளி கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைல் சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு செட்டிநாடு தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கப் வெங்காயம்
- 4 பழுத்த தக்காளி
- 4 வர மிளகாய்
- 3 காஷ்மீர் சிவப்பு மிளகாய்
- 5 பூண்டு பல்.
- 2 இன்ச் புளி
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் வெல்லம்
- 4 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- அரை ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- - எண்ணெய் சூடானதும் அதில் கடலைப் பருப்பு, வர மிளகாய், புளி ஆகியவற்றைப் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்
- அதே எண்ணெயில், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பல் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை 3-4 நிமிடங்கள் வதக்கவும். இந்த கட்டத்தில் உப்பு சேர்த்து வதக்கவும்
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாக குழைந்து மென்மையாகும் வரை வதக்கவும்.
- இந்த கலவையை அறை வெப்பநிலையில் குளிர வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய மிளகாய், கடலைப் பருப்பு மற்றும் புளி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின்னர் இதனுடன் வதக்கிய வெங்காயம், பூண்டு கலவையைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- பின்னர் வதக்கிய தக்காளி மற்றும் வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான செட்டிநாடு தக்காளி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
