Latest Updates
-
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன?
இந்த 4 ராசி பெண்கள் அவங்க கணவரை ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம்... உங்க மனைவி ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதற்காக பல நூற்றாண்டுகளாக மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் ஒரு தனித்துவமும், திறமையும் இருக்கும். சில ராசிக்காரர்கள் அவர்களின் தைரியம், வலிமை மற்றும் கருணைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
அதே சமயம் சிலர் அவர்கள் தந்திரமான குணத்திற்கும், ஆதிக்கம் செலுத்தும் குணத்திற்கும், மற்றவர்களை கட்டுப்படுத்தும் குணத்திற்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சரி அவர்கள் மற்றவர்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்துபவர்களாகவும், ஆட்டிப்படைப்பவர்களாகவும் இருப்பார்கள். குறிப்பாக இந்த ராசிகளில் பிறந்த ஆண்கள் அவர்களின் கணவர் உட்பட அனைவரையும் ஆட்டிப்படைப்பவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை கட்டுப்படுத்தும் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசி பெண்கள் ரகசியமானவர்கள், அவர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டு, தாங்கள் விரும்புவதைப் பெறுவதற்காகவே செயல்படுவார்கள். அவர்கள் தந்திரமானவர்கள், ஏனென்றால் அவர்களின் கணவர் எந்த நிலையிலும் அவர்களுக்கு எதிராகச் செல்வது ஒரு பெரிய தவறு என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அசைக்க முடியாத விசுவாசத்தைக் கோருகிறார்கள், அதைப் பெறவில்லை என்றால், மற்றவர்கள் கடந்த காலத்தில் அவர்களிடம் சொன்ன அனைத்து ரகசியங்களையும் அவர்கள் வெளிப்படுத்த அவர்கள் துளியும் தயங்க மாட்டார்கள்.
மிதுனம்
மிதுன ராசிகளில் பிறந்த பெண்கள் இரட்டை முகம் கொண்டவர்களாக இருப்பதால் தந்திரமானவர்களாகவும், மற்றவர்களை ஆட்டிப்படைப்பவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் சூழலுக்கு ஏற்ப தங்களின் முகத்தையும், குணத்தையும் மாற்றிக்கொள்வார்கள். அவர்கள் பெரும்பாலும் உண்மைகளை மறைத்தோ அல்லது தங்கள் வசதிக்கேற்ப மாற்றியோ, தங்களின் பொய்களை நியாயப்படுத்துவார்கள். அவர்களின் பொய்கள்தான் அவர்களைப் பாதுகாக்கும் கவசமாக இருக்கும். அதேசமயம் அவர்கள் ஒரு விஷயத்தை செய்வதாக வாக்குக் கொடுப்பார்கள், ஆனால் அதை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
மகரம்
மகர ராசி பெண்கள் அனைவரையும் முட்டாளாக்குவதில் கில்லாடிகளாக இருப்பார்கள், அதன்மூலம் மற்றவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்டி வைக்கிறார்கள். மகர ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தையும் அறிவையும் பயன்படுத்தி மற்றவர்களின் புத்திக்கூர்மையை குறைத்து மதிப்பிடவும், தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டவும் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவரையும் தங்கள் திட்டங்களுக்கு ஏற்ப இணங்க வைக்க முடியும். மகர ராசிக்காரர்களை எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு நெருங்கியவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அவர்களின் வசியத்தை மீறி யாராலும் செயல்பட முடியாது.
சிம்மம்
சிம்ம ராசி பெண்கள் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட, வசீகரமான மற்றும் அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடியவர்களில் ஒருவராவர். அவர்கள் தங்கள் வார்த்தைகளால் மற்றவர்களை மயக்கும் திறமையைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் தந்திரத்தை மற்றவர்கள் கண்டுபிடிக்காமல் இருக்க எப்போது அப்பாவியாக நடந்து கொள்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களையும் தங்கள் சொந்த நலனுக்காக செய்வார்கள், அது மற்றவர்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தினாலும் கூட அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஆனால் அவர்கள் அதை செய்யும் போது அது அனைவருக்கும் பலனளிப்பது போன்ற மாயத்தோற்றத்தை அவர்கள் உருவாக்குவார்கள். அவர்களின் தந்திரத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












