Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
செட்டிநாடு சுறா மீன் குழம்பு
இந்த வார இறுதியில் ஒரு சுவையான மற்றும் காரமான செட்டிநாடு ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு சுறா மீன் குழம்பை செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.
இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் மீன் எடுக்க முடிவெடுத்துள்ளீர்களா? உங்களுக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் இந்த வார இறுதியில் ஒரு சுவையான மற்றும் காரமான செட்டிநாடு ரெசிபியை உங்கள் வீட்டிலேயே செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு சுறா மீன் குழம்பை செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். செட்டிநாடு சுறா மீன் குழம்பு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாக இருக்கும். அதோடு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு சுறா மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு சுறா மீன் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சுறா மீன் - 500 கிராம்
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
* புளி நீர் - 1/4 கப்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 3
செய்முறை:
* முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய மீனில் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்பு தூள் சேர்த்து, அதன் பின் புளி நீரை ஊற்றி நன்கு கிளறி, அதோடு 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், மூடி வைத்து மிதமான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் மீன் துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் மீன் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு சுறா மீன் குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications