Latest Updates
-
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல பசங்களுக்கு இந்த செட்டிநாடு புட்டு செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க
Chettinad Rangoon Puttu Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தைகளின் பசியைப் போக்க வேண்டுமா? உங்கள் பிள்ளைகள் ஸ்ட் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு ஒரு செட்டிநாடு ஸ்வீட்டை செய்து கொடுங்கள். அது தான் செட்டிநாடு ரங்கூன் புட்டு. இந்த புட்டு பார்க்க கேசரி போன்று காணப்படும். ஆயினும், இதன் சுவை வேற லெவலில் இருக்கும்.
அதுவும் வரலட்சுமி நோன்பு வரப்போகிறது. இந்த நோன்பு நாளில் லட்சுமி தேவிக்கு விதவிதமான பலகாரங்களை செய்து படைக்க விரும்புவர். நீங்களும் அப்படி விருப்பப்படுகிறீர்களா? அப்படியானால் ரவையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து செட்டிநாடு ரங்கூன் புட்டு செய்யுங்கள். இந்த புட்டு செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ரங்கூன் புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ரங்கூன் புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 3 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* உலர் திராட்சை - 10
* துருவிய தேங்காய் - 1 கப்
* ரவை - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து,
அதில் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும் அதை
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக ப்ரை
செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே நெய்யில் துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுத்து, முந்திரியுடன் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ரவையை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை, தேங்காயை
சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும்.
* நீர் வற்றியதும், அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு ரங்கூன் புட்டு
தயார்.



Click it and Unblock the Notifications
